கற்றாழை மிகுந்த குளிர்ந்த தன்மை கொண்டது கற்றாழை. இதில், சிறுகற்றாழை, கருங்கற்றாழை, பெருங் கற்றாழை என்று பலவகை உண்டு.
அதிக தண்ணீர் தேவையில்லாத பயிர் வகைகளில் இதுவும் ஒன்று.
மலட்டுத் தன்மையைப் போக்குவதில் கற்றாழை முன் நிற்கும் ஒன்றாக இருக்கிறது.
முகம் அழகு பெறவும், முகப்பருக்கள் காணாமல் போகவும் இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி வந்தால் போதும்.
வாதநோய் வந்து கை, கால் விழுந்தவர்கள் கற்றாழையை அரிந்து அதனுள்ளிருக்கும் சதைப்பற்றான சோற்றை எடுத்து அரைத்து, நோய் கண்ட இடத்தில் பற்று தொடர்ந்து போட்டு வர, படிப்படியாய் நோய் குணம் பெறும்.
நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருப்பவர்கள், இதன் சோற்றை எடுத்து மஞ்சளுடன்மை போல் அரைத்து புண்கள் மீது பூசிவர,புண்கள் எளிதில் ஆறுவதோடு, வடுக்களும் ஏற்படாது.
இதன் சோற்றை, எள் எண்ணெயோடு கலந்து காய்ச்சி மாதம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து வந்தால்,முடி உதிர்வது நிற்பதோடு, மேனியும் அழகு பெறும். பசியை உண்டாக்கவும், வயிற்றுப் புழுக்கள் அழியவும், மலச்சிக்கல் அகலவும் கற்றாழை துணை நிற்கும்.
சிலருக்கு சிறுநீர் சரியாக வெளியேற துன்பப் படுவர். வேறு சிலருக்கு சிறுநீரில் இரத்தமும் சேர்ந்து வெளிவந்து துன்பம் கொடுக்கும்.
இவர்கள் கற்றாழையின் சோற்றை நன்கு அதன் வழவழப்பு நீங்கும் படி நீரில் கழுவி எடுத்து -அத்தோடு பனங்கற்கண்டையும், பொன்னிறமாக வறுத்த சீரகத் தூளையும் கழுவி வைத்துள்ள கற்றாழையின் சோற்றை யும் சேர்த்து ஒரு கரண்டியளவில் சாப்பிட்டு வர, நீர் பிரச்சனைகள் நீங்கிப்போகும்.
பெண்களின் வீட்டுவிலக்குப் பிரச்சனைக்கும், விந்து பெருக்கிற்கும், உடல் அழகிற்கும், கற்றாழையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பயன் பெறலாம்.
உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இது அருமருந்தாகும்.
No comments:
Post a Comment