Welcome to Tamil Artificial intelligence Creation
For more update like, share and subscribe
பல்வேறு நோய்களைப் போக்குகின்ற ஆற்றல் பெற்றது கரிசலாங்கண்ணி இலை.
ஒருவருக்கு தடுப்பு நீங்க வேண்டுமானால், இதன் இலையைப் பறித்து வந்து நன்கு அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொடுக்க நோய் நீங்கும்.
பாம்புக் கடியின் விஷம் நீங்க வேண்டுமானால், இதன் இலைச்சாற்றை 90-துளிகள் எடுத்து, மோரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் பாம்பின் விஷம் இறங்கிப் போய்விடும். மோர் இல்லாத போது நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
கரிசலாங்கண்ணி இலையின் சாற்றை கால் முதல் அரை ஆழாக்கு வீதம் காலை மாலை கொடுத்து வந்தால் -சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்றுபோகும்.
காதுவலிக்கு இதன் இலைச்சாற்றை சிறிது பிழிந்து விட, வலி நீங்கி நலம் கிட்டும்.
இதன் இலையை எள் எண்ணெயில் மை போல் அரைத்து யானைக்கால் நோய் கண்டவர்கள் தொடர்ந்து தடவி வர, குணம் பெறும்.
மூலநோய் கொண்டு அவதிப்படுபவர்கள், இதன் இலையை தூய்மையாக வேக வைத்து ஆவி பிடித்துவர, படிப்படியாய் மூலநோய் அகன்று போகும்.
இறைப்பு நோய் வந்தவர்கள் இதன் இலையை நிழலில் காயவைத்து தூள்செய்து அத்தூளோடு தேன் கலந்து சாப்பிட்டு வர, நோய் தீரும்.
கைக்குழந்தைகள் நீர்க்கோர்வை கண்டு மூச்சுவிட கஷ்டப்படும் காலங்களில், இதன் இலையைக் கொண்டு வந்து நன்கு தூய்மை செய்து, அதைக் கசக்கிப் பிழிந்து இரண்டு துளி எடுத்து, அதை எட்டுத்துளி தேனோடு கலந்து கொடுக்க, அடுத்து சில நொடிகளிலேயே நல்ல பலன் கிட்டும்.
செய்யான் கடி மிக மோசமான ஒன்று. இதன் கடி விஷத்திலிருந்து தப்பிக்க, கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து வந்து, அதை நன்கு அரைத்து எலுமிச்சையளவு எடுத்து அதோடு ஆட்டுப்பாலையும் சேர்த்து கலக்கி விடியற் காலையில் மூன்று நாள் கொடுத்து வந்தால், விஷக்கடி விலகிப்போய்விடும்.
தேவைப்படும் அளவிற்கு இதன் சாற்றை எடுத்து - அவரவர்கள் பயன்படுத்தும் எண்ணெயில் காய்ச்சி வைத்துக் கொண்டு - தினமும் தலைக்குத் தேய்த்து வர, உடல் சூடு குளிர்ச்சி பெறுவதோடு, முடி உதிர்வது நிற்பதோடு, கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக வளரவும் செய்யும்.
No comments:
Post a Comment