வல்லாரை இலை
வல்லாரை, எல்லோரையும் வல்லவராய் வாழ வைக்கும் இலையாகும்.
நினைவாற்றலை நீள வளர்ப்பதில் நிகரற்ற ஆற்றல் பெற்ற அற்புத இலை வல்லாரை.
சதுப்பு நிலங்களில் தாராளமாய் வளர்கின்ற ஒற்றை இலைத் தாவரம் இது.
முலைக்கீரையைப் போலவே, அரைக்கீரையைப் போலவே இதை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லதல்ல. வாரம் இருமுறை போதுமானது.
வல்லாரை இலையின் முழு சக்தியையும் நாம் பெற வேண்டுமெனில், இவ்விலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது புளியைச் சேர்த்துக் கொள்ளுதல்
கூடாது.
மூளை திசுக்கள் ஒருவருக்கு நன்கு வளர்ச்சி பெற வேண்டுமானால், வல்லாரை இலையை பாசிப் பருப்போடு, நெய்யும் சேர்த்து உண்டு வந்தால் போதும்.
மஞ்சளாகவும், கடுகடுப்போடும் சிறுநீர் கழிப்பவர் களும், மேனி எரிச்சல் கொண்டவர்களும் இவ்விலையை துவரம்பருப்பு, வெங்காயம், சீரகம் சேர்த்து சமைப்ப தோடு, மிளகையும் சேர்த்து குழம்பு வைத்து சேர்த்துக் கொண்டால், மேற்கூறிய நோய்கள் நீங்கும்
ஆறாத புண் ஆற வேண்டுமானால், வல்லாரை இலையை அரைத்து புண் மீது கட்ட, நல்ல பலன் கிடைக்கும்.
பெரும்பாலும் பெண்களுக்கு பெரும்பாடு நோய் வரும். அவ்வேளையில், வல்லாரை இலையையும், உத்தாமணி இலையையும் சம அளவில் சேர்த்து, நன்கு உலர்த்தி தூளாக்கி, ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து நான்கு நாட்கள் காலை வேளையில் அருந்தினால் போதும், பெரும்பாடு ஓடும்.,
வாதம், வாய்வு, விரை வீக்கம், யானைக்கால், தொழுநோய், நெரிக்கட்டுதல், கண்டமாலை, மேக ரணம், பைத்திய ரோகம், படை, சூதகக்கட்டு, நினைவாற்றல் இல்லாமை, மாதவிடாய் கோளாறு போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கின்ற ஆற்றல் கொண்டது, வல்லாரை இலை.
சிக்கல்களில் பெரிய சிக்கல் மலச்சிக்கல். இச்சிக்கலில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், வல்லாரை இலைகளை பறித்து வந்து சுத்தம் பார்த்து, இட்லியை அவிப்பது போல் அவித்து, பின் அதை நிழலில் காய வைத்து, பால் பனங்கற்கண்டோடு வாரம் ஒரு நாள் சாப்பிட்டு வந்தால், உங்கள் 'சிக்கல்' தீரும்.
தொழுநோய் ஒருவரை விட்டு தொலைந்து போக வேண்டுமானால், பரங்கித் தூளையும், வல்லாரை இலைப் பொடியையும் சம அளவில் கலந்து காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் வெறும் வயிற்றில் வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால், தொழுநோய் தொலைந்து போகும்.
No comments:
Post a Comment